Tuesday, February 15, 2011

சச்சின்

கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு, உலக கோப்பை வெல்லாதது மட்டுமே ஒரே குறையாக உள்ளது. ஆறாவது முறையாக பங்கேற்க உள்ள இவர், மீண்டும் ரன் வேட்டை நடத்த காத்திருக்கிறார். தற்போது 37 வயதான இவர், கிட்டத்தட்ட தனது கடைசி உலக கோப்பை தொடரில் கலந்து கொள்கிறார். இதனால், இவருக்கு உலக கோப்பை வென்று "சூப்பர்' பரிசு அளிக்க ஒட்டுமொத்த இந்திய அணியும் தயாராக உள்ளது.
இந்திய அணி மீண்டும் ஒரு முறை உலக கோப்பை கைப்பற்ற தயாராகிறது. இம்முறை தோனி தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்று தந்தார் கபில் தேவ். இதற்கு பின் பெரிதாக சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிராவிட், கங்குலி, கும்ளே போன்ற அனுபவ வீரர்கள் இம்முறை இல்லை. ஆனாலும் சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, காம்பிர் உள்ளிட் இளம் பேட்டிங் படை களமிறங்குகிறது. துவக்கத்தில் அசத்த சச்சின், சேவக் உள்ளனர். யுவராஜ் சிங் இழந்த "பார்மை' மீட்டுள்ளது நம்பிக்கை தரும் விஷயம். கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என மூன்று பணிகளில் பட்டையை கிளப்ப காத்திருக்கிறார் தோனி.
வேகத்துக்கு ஜாகிர், நெஹ்ரா, முனாப் உள்ளனர். சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஹர்பஜன், அஷ்வின், சாவ்லா அடங்கிய மூவர் கூட்டணி அசத்தலாம். பிரவீண் குமார் காயத்தில் இருந்து விரைவில் மீள வேண்டும். கிறிஸ்டன் பயிற்சியில் அணியின் பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
பொதுவாக இந்திய மண்ணில் இந்தியாவை வீழத்துவது கடினம். இம்முறை பெரும்பாலான உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பது நமக்கு சாதகம். உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமும் கைகொடுக்கும் என்பதால், இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment