Saturday, February 12, 2011

உலக கோப்பை "ஜுரம்' ஆரம்பம்!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.19-ஏப்.2) தொடரை நடத்துகின்றன. இதற்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்த பயிற்சி போட்டிகள் வெளிநாட்டு வீரர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். ஏனெனில் இந்திய துணைக் கண்டத்தின் தட்ப வெப்பநிலை மற்றும் மைதானத்தின் தன்மையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப உலக கோப்பை தொடருக்கு தயார் செய்து கொள்ள முடியும்.
ஐந்து போட்டிகள்:
இன்று ஐந்து பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில், நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதும் பயிற்சி போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் வெஸ்ட் இண்டீஸ்-கென்யா (பிரேமதாசா மைதானம்), இலங்கை-நெதர்லாந்து (சின்கலேசே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம்) உள்ளிட்ட அணிகள் மோதும் இரண்டு பயிற்சி போட்டி நடக்கிறது.
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் நகரில், வங்கதேசம்-கனடா அணிகள் மோதும் பயிற்சி போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
---
நேரடி ஒளிபரப்பு
இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில், இந்திய அணி பங்கேற்கும் இரண்டு பயிற்சி போட்டிகளை (பிப். 13, 16) "ஸ்டார் கிரிக்கெட்' சேனல் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. வரும் 17ம் தேதி வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள பங்கபந்து தேசிய மைதானத்தில் நடக்கும் துவக்க விழா மாலை 5.30 மணியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment