Tuesday, February 15, 2011

தோனி

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக தோனி திகழ்கிறார். நெருக்கடியான நேரத்திலும் பதட்டப்படாமல் மிகவும் "கூலாக' செயல்படுவதே இவரது பலம். கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை வென்று காட்டினார். இதே போல இம்முறை 50 ஓவர் உலக கோப்பையை வென்று, புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறார்.
இந்திய அணி மீண்டும் ஒரு முறை உலக கோப்பை கைப்பற்ற தயாராகிறது. இம்முறை தோனி தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்று தந்தார் கபில் தேவ். இதற்கு பின் பெரிதாக சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிராவிட், கங்குலி, கும்ளே போன்ற அனுபவ வீரர்கள் இம்முறை இல்லை. ஆனாலும் சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, காம்பிர் உள்ளிட் இளம் பேட்டிங் படை களமிறங்குகிறது. துவக்கத்தில் அசத்த சச்சின், சேவக் உள்ளனர். யுவராஜ் சிங் இழந்த "பார்மை' மீட்டுள்ளது நம்பிக்கை தரும் விஷயம். கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என மூன்று பணிகளில் பட்டையை கிளப்ப காத்திருக்கிறார் தோனி.

No comments:

Post a Comment